காணாமற்போனோர் தொடர்பிலான பிரதமரின் கருத்திற்கு மன்னார் பிரஜைகள் குழு கண்டனம்
காணாமல் போனவர்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்திற்கு மன்னார் பிரஜைகள் குழு கண்டனம் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர், காணாமல் போனவர்கள் தற்போது உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பிரஜைகள் குழுவின் இணைப்பாளர் அந்தோனி சகாயம் ஜ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்.
அத்தோடு, கடந்த 2009ஆம் ஆண்டு அருட்தந்தை பிரான்சிஸ் உடன் அதிகளவிலானோர் இராணுவத்திடம் சரணடைந்ததாக குறிப்பிட்ட அவர், அவர்களும் காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
காணாமல் போனவர்கள் தற்போது உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றால் காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் எங்கே எனவும் அந்தோனி சகாயம் கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் அதற்கு முதலமைச்சரிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் மன்னார் பிரஜைகள் குழுவின் இணைப்பாளர் அந்தோனி சகாயம் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பிரதமரின் கருத்து தொடர்பில் காணாமல் போனவர்களின் பெற்றோர்களை அழைத்து மன்னார் பிரைஜைகள் குழு அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை சந்திப்பு ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Reviewed by NEWMANNAR
on
January 17, 2016
Rating:
No comments:
Post a Comment