அண்மைய செய்திகள்

recent
-

ஏழு வயது மாணவன் சேகரித்த 10,000 டொலர் நிதி: குவியும் பாராட்டுகள்


அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் 7 வயது மாணவன் ஒருவன் இணையதளம் மூலமாக 10,000 டொலர் நிதி திரட்டியுள்ள சம்பவம் பாராட்டுகளை பெற்றுத்தந்துள்ளது.
மிக்சிகன் மாகாணத்தில் உள்ள பிளின்ட் நகரம் நீர் மாசுபடுதலால் மிகவும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்று.

இங்குள்ள மாணவர்கள் இதனால் தங்கள் கைகளை சுத்தம் செய்வதில் அக்கறை காட்டுவதில்லை.

இந்த தகவலை அறிந்த 7 வயது மாணவனான Isiah Britt நிதி திரட்டும் இணையத்தளம் ஒன்றில் தமது கருத்தை பதிவு செய்து நிதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளான்.

அப்பகுதி மாணவர்களுக்கு பெரு நிறுவனங்களின் பெயரில் வெளிவரும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளன, ஆனாலும் அவர்கள் கரங்கள் சுத்தமாக இல்லை.

ஆதலால் போதிய நிதியை அன்பளிப்பாக வழங்கினால் பேருதவியாக இருக்கும் என அந்த இணையதளத்தில் மாணவன் Isiah பதிவிட்டுள்ளான்.

இதைத்தொடர்ந்து மாணவனின் கருத்தை ஆதரிக்கும் விதமாக கோரிக்கை விடுத்த இரண்டே வாரத்தில் 10,125 டொலர் நிதி சேர்ந்துள்ளது.

ஒரே ஒரு பள்ளிக்காக துவக்கப்பட்ட இந்த நிதி திரட்டும் முயற்சி தற்போது அந்த நகரத்தில் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கை கழுவும் கலவையை வழங்கும் அளவிற்கு நிதி சேர்ந்துள்ளது.

இதனையடுத்து இந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த மாணவன் Isiah வாகன தொழிற்சாலை நகரமான பிளின்ட் பகுதி மாணவர்கள் அனைவரின் கரங்களும் சுத்தமாகும் வரையில் இந்த முயற்சி தொடரும் என தெரிவித்துள்ளான்.

மாணவனின் இந்த முயற்சிக்கு பெருகும் ஆதரவு கண்டு பெருமை கொள்ளும் அவனது பெற்றோர், அடுத்த இலக்காக மாணவிகளுக்கான சுகாதார பொருட்களை வழங்க நிதி திரட்ட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஏழு வயது மாணவன் சேகரித்த 10,000 டொலர் நிதி: குவியும் பாராட்டுகள் Reviewed by Author on February 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.