அண்மைய செய்திகள்

recent
-

மனிதர்களுக்கு இடையே சுவர்களை கட்டுபவர்கள் கிறிஸ்துவர்களே அல்ல: ஜனாதிபதி வேட்பாளரை சீண்டிய போப்




மனிதர்களுக்கு இடையே சுவர்களை கட்டுபவர்கள் கிறிஸ்துவர்களாக இருக்க முடியாது என்று தனது மெக்ஸிக்கோ பயணத்தின் போது போப் பிரான்சிஸ்  தெரிவித்துள்ளார்.

மெக்ஸிக்கோவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள போப் பிரான்சிஸ் பல்வேறு மக்களை சந்தித்து ஆசி வழங்கினார்.

தனது பயணத்தின் கடைசி நாளான நேற்று அமெரிக்க எல்லைக்கு அருகில் உள்ள ரியோ கிராண்டி அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

இந்நிலையில் ரோம் நகருக்கு திரும்பி செல்வதற்கு முன்பாக பேசிய போது, மக்களுக்கு இடையில் பாலங்களை எழுப்புவதற்கு பதில் சுவர்களை எழுப்ப முயல்பவர்கள் கிறிஸ்துவர்களாக இருக்க முடியாது.

இத்தகைய செயல்கள் எந்த போதனையிலும் இல்லை என்று தெரிவித்தார். அமெரிக்க கத்தோலிக்கர்கள் டிரம்புக்கு ஓட்டு போடலாமா? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது,இந்த விவகாரத்தில் நான் தலையிட போவதில்லை. ஆனால் நான் சொல்வதேல்லாம் ஒன்றே ஒன்று தான்.

சுவர்களை எழுப்ப வேண்டும் என்று அவர் கூறிக்கொண்டு திரிந்தால் அவர் கண்டிப்பாக கிறிஸ்துவரே இல்லை என்று தெரிவித்தார்.

அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் போப் பிரான்சிஸ் கருத்துக்கு பதில் கூறும் வகையில் டிரம்ப் பேசியுள்ளார்.

தென் கரோலினாவில் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட டிரம்ப் பேசியதாவது, எந்த தலைவருக்கும், குறிப்பாக மத தலைவர்க்கு அடுத்த மனிதர்களின் மதம் குறித்து பேச உரிமையில்லை.

மெக்ஸிக்கோ அரசாங்கம் போப்பை எனக்கு எதிராக தூண்டியுள்ளது. நான் கிறிஸ்துவன் என்பதில் பெறுமையடைகிறேன்.

ஒரு வேளை ஐ.எஸ் தீவிரவாதிகளின் முக்கிய குறியான வாடிகனில் தாக்குதல் நடந்தால் இதே போப் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்திருக்கலாம் என்று வேண்டுவார் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வென்றால் அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கு இடையில் சுவர் எழுப்புவேன் என்றும் அமெரிக்காவில் உள்ள அகதிகளை நாடு கடத்துவேன் என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களுக்கு இடையே சுவர்களை கட்டுபவர்கள் கிறிஸ்துவர்களே அல்ல: ஜனாதிபதி வேட்பாளரை சீண்டிய போப் Reviewed by Author on February 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.