தலைநகரில் மண்ணெண்ணெய் விளக்குகளில் 3822 வீடுகள்....
தலைநகரில் மண்ணெண்ணெய் விளக்குகளில் 3822 வீடுகள்
இவ்வாறு மண்ணெண்ணெய் விளக்குகள் மூலம் ஒளியை பெறும் 2898 வீடுகள் கொழும்பு பிரதேச செயலக பிரிவிலும் 924 வீடுகள் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக பிரிவிலும் அமைந்துள்ளதாக கொழும்பு மாநகரசபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை சுட்டிக்காட்டியே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரம் 15 நகர பிரிவுகளுக்கு உட்பட்டுள்ளதுடன் அவற்றில் மட்டக்களப்பு, முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, லுணுகொகுண, மாதம்பிட்டி, கெத்தாராம ஆகிய பிரதேசங்களிலேயே அதிகமான வீடுகளில் மின்சாரம் இன்றி மண்ணெண்ணெய் விளக்குகள் பிரயோகிக்கப்படுகின்றன.
கொழும்பு நகரில் ஒரு இலட்சத்தி 18 ஆயிரத்து 780 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஒரு இலட்சத்தி 14 ஆயிரத்து 771 வீடுகளுக்கே மின்சாரம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இது தொடர்பாக கொழும்பு மாநகரசபை மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலிடம் வினவியபோது, கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் மின்சார வசதியின்றி எந்த வீடுகளும் இல்லை. அவ்வாறு மின்சாரவசதி இன்றி இருக்கும் வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளாகும். அவற்றுக்கு அரசாங்கத்தினால் மின் இணைப்புக்கள் வழங்கப்படுவதில்லை என்றார்.
தலைநகரில் மண்ணெண்ணெய் விளக்குகளில் 3822 வீடுகள்....
Reviewed by Author
on
February 13, 2016
Rating:

No comments:
Post a Comment