அண்மைய செய்திகள்

recent
-

ஒரு கழிவறைக்கு 40,000 டொலர் செலவு செய்த கம்போடியா அரசு: காரணம் என்ன?


கம்போடியாவில் 40,000 டொலர் செலவில் கழிவறை ஒன்று கட்டப்பட்டுள்ள விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கம்போடியாவில் மிகவும் ஏழ்மையான மாகாணங்களில் ஒன்று Ratanakkiri. இந்த மாகாணத்தில் தான் நவீன வசதிகளுடன் கூடிய கழிவறை ஒன்றை 40,000 டொலர் செலவில் கட்டப்படுகின்றது.

இந்த மாகாணத்தில் 3 நாட்கள் அரசு முறை பயணமாக தாய்லாந்து இளவரசி மகா சக்ரி சிரிந்தோன் வருகை தரவிருக்கின்றார்.

Ratanakkiri மாகாணத்தில் அமைந்துள்ள Yeak Laom ஏரியை அடுத்துள்ள பகுதியில் தாய்லாந்து இளவரசி தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் ஒருபகுதியாகவே பெரும் பொருட்ச்செலவில் நவீன வசதிகளுடன் கூடிய கழிவறை ஒன்றையும் கட்டியுள்ளனர்.

தாய்லாந்தின் பிரபல கட்டுமான நிறுவனமே இந்த கழிவறையை அங்குள்ள விலை உயர்ந்த பொருட்களை இறக்குமதி செய்து கட்டி முடித்துள்ளது.

ஏரிப்பகுதியில் இளவரசியின் அரசு முறை பயணம் முடிவுக்கு வந்ததும் இந்த கழிவறையை இடித்து அப்புறப்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.




கம்போடியாவிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட மாகாணமான ரத்னகிரியில் பொதுமக்களுக்கு தேவையான எந்தவித நலத்திட்டங்களும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என குற்றஞ்சாட்டும் சமூக ஆர்வலர்கள்,

இளவரசிக்கு என செலவாக்கும் இந்த தொகை சாதரண மக்களுக்கு பயன்படுத்தியிருந்தால் கம்போடியா நாட்டின் ஒட்டுமொத்த கிராமங்களுக்கும் அரசால் கழிவறை வழங்கியிருக்க முடியும் என்றுள்ளனர்.
ஒரு கழிவறைக்கு 40,000 டொலர் செலவு செய்த கம்போடியா அரசு: காரணம் என்ன? Reviewed by Author on February 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.