வன்னிப்பகுதி தொண்டர் ஆசிரியர்கள் தெரிவில் முறைகேடுகள்: பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் விசனம்...
யாழ் மற்றும் வன்னிப்பிரதேசங்களில் நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக கடைமை புரிபவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனையொட்டி வலயக்கல்விப்பணிமனையால் வெளியிடப்பட்டுள்ள தொண்டர் ஆசிரியர் பட்டியலில் பல குறைபாடுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக பாடசாலைக்கு சம்மந்தம் இல்லாத பிற தொழில் புரிகின்ற பலரது பெயர்கள் குறித்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் பலரை பாடசாலை அதிபர்களுக்கே யாரென்று தெரியாத நிலை காணப்படுகிறது.
அத்துடன் பிற மாவட்டத்தைச்சேர்ந்த சிலரது பெயர்கள் குறித்த வலயப்பணிமனையால் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் தங்களில் பலர் யுத்தம் நடைபெற்ற காலங்களிலிருந்து தொண்டர் ஆசிரியராக கடைமை புரிவதாகவும் கடந்தமுறை தொண்டர்
ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டபோதும் அரசியல் பழிவாங்கல் நிமித்தம் தாம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
அது மாத்திரமின்றி தொண்டர் ஆசிரியர் பட்டியலில் பதிவுகளை பேணிக்கொண்டு பல வருடங்களாக பாடசாலைக்கு சமூகமளிக்காதவர்களும் இந்தப்பட்டியலில் அடங்குவது குறித்த சம காலத்தில் பாடசாலைகளில் கல்வி கற்பித்து வரும் தொண்டர் ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தவிடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாண்புமிகு முதலமைச்சரும் தலையிட்டு நீதி கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
வன்னிப்பகுதி தொண்டர் ஆசிரியர்கள் தெரிவில் முறைகேடுகள்: பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் விசனம்...
Reviewed by Author
on
February 22, 2016
Rating:

No comments:
Post a Comment