அண்மைய செய்திகள்

recent
-

டெங்கு,வைரஸ் காய்ச்சல்: மாணவர்களின் வரவில் வீழ்ச்சி


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு வகையான காய்ச்சல் பரவி வருவதால் பாடசாலைகளுக்கு சமுகமளிக்கும் மாணவர்களின் தொகையில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைகளில் கல்வியைத் தொடர்கின்ற மாணவர்களின் வரவிலேயே இவ்வாறு வீழ்ச்சிநிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சலும், அறியப்படாத வைரஸ் காய்ச்சலும் மாறிமாறி தாக்கி வருவதால் மாணவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, மட்டக்களப்பு பொது வைத்தியசாலை, ஏறாவூர் வைத்தியசாலை, காத்தான்குடி வைத்தியசாலைகளில் இவ்வாறு அதிகமான மாணவர்கள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பனியுடன் கூடிய காலநிலை தொடர்வதனால் காநிலையில் ஏற்பட்ட மாற்றம் இவ்வாறு மாணவர்கள் நோய்த்தாக்கத்திற்கு உட்பட்டதற்குரிய காரணமாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
டெங்கு,வைரஸ் காய்ச்சல்: மாணவர்களின் வரவில் வீழ்ச்சி Reviewed by Author on February 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.