அண்மைய செய்திகள்

recent
-

பிறந்த நாள் கொண்டாடத்திற்கு மில்லியன் டொலர் செலவு செய்த அதிபர் ....


தமது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடும் பொருட்டு நாட்டின் அதிபர் ஒருவர் ஒரு மில்லியன் டொலர் செலவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வறுமையால் மக்கள் அல்லல்படும் ஜிம்பாப்வே நாட்டில், உலகின் மிகவும் வயதான தலைவர்களில் ஒருவராக கருதப்படும் அதிபர் ராபர்ட் முகாபே தனது 92-வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடியுள்ளார்.

பல்வேறு நாடுகளின் தலைவர்களை விருந்தினர்களாக கொண்ட இந்த பிறந்த நாள் விழாவில் 92 கிலோ எடை கொண்ட கேக் பரிமாறப்பட்டது.

3 மில்லியன் மக்கள் வறுமையால் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் ஜிம்பாப்வே நாட்டில் அதிபரின் பிறந்த நாள் விழா கோலாகலங்களை எதிர் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

தொடர்ந்து 36 ஆண்டு கால முகாபே ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொருளாதார வீழ்ச்சியையும் தலைவிரித்தாடுவதாக பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த பிறந்த நாள் விழா விருந்துக்காக ஆளும்கட்சியினர் ஏழை எளிய மக்களிடம் இருந்து நன்கொடை வசூல் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல லட்சக்கணக்கான மக்கள் மிகவும் கொடுமையான வறுமையின் பிடியில் சிக்கித்தவித்து வரும் வேளையில்,

சுமார் 50 ஆயிரம் சிறப்பு விருந்தினருக்கு முகாபே அளித்த இந்த விருந்து சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.





பிறந்த நாள் கொண்டாடத்திற்கு மில்லியன் டொலர் செலவு செய்த அதிபர் .... Reviewed by Author on February 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.