அண்மைய செய்திகள்

recent
-

உலக பணக்காரர்கள் பட்டியல்; 17 வது ஆண்டாக பில்கேட்ஸ் முதலிடம்!




நியூயார்க்; பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2016 ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 17-வது முறையாக மீண்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். 

பிரபல அமெரிக்க வணிகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் உலக அளவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த 21 ஆண்டுகளாக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுவரும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டுக்கான பட்டியலை நேற்று வெளியிட்டது.

மொத்தம் 1810 பேர்  வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்த பட்டியலில் கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பெற்றுவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இம்முறையும் தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். 

பில்கேட்ஸின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 75 பில்லியன் டாலராக உள்ளது. இது சென்ற ஆண்டை விட 4.2 பில்லியன் டாலர் குறைவுதான். பில்கெட்ஸ்க்கு அடுத்த 2-வது இடத்தில் ஸ்பானிஷ் பில்லியனர் அமன்சியோ ஒர்டிகா உள்ளார்.

இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி 36-வது இடத்தை பெற்றுள்ளார். இந்தியாவை சேர்ந்த 84 பில்லியனர்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் 36-வது இடத்தில் இருந்தாலும் இந்தியர்களில் முதலாவதாக முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார்.

கடந்த முறை 66 வது இடத்தில் இருந்த தமிழரான எச்.சி.எல் நிறுவனர் ஷிவ்நாடார் தற்போது 88 வது இடத்தைப் பெற்றிருக்கிறார். மற்றொரு தமிழரான இன்போசிஸ் நாராயணமூர்த்தி 959 வது இடத்திலும், சர்ச்சைக்குரிய தொழிலதிபரும் மோடியின் நண்பராக பத்திரிக்கைகளால் விமர்சிக்கப்படுபவருமான கௌதம் அதானி 453 வது இடத்திலும் உள்ளனர்.
உலக பணக்காரர்கள் பட்டியல்; 17 வது ஆண்டாக பில்கேட்ஸ் முதலிடம்! Reviewed by Author on March 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.