அண்மைய செய்திகள்

recent
-

சேஃப்டி பின்களை வைத்து உலக சாதனை செய்த கல்லூரி மாணவிகள்!


நம்மில் பலருக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு சாதனை செய்து பெருமை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அந்த சாதனை செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ளமாட்டார்கள்.  ஆனால், விடாமுயற்சியும், உழைப்பும் இருந்தால் எந்த ஒரு சிறிய விஷயத்தையும் வைத்து சாதனை செய்யலாம். இதற்கு உதாரணம் தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள்.

இந்த கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் பயிலும் மாணவிகள் 171 பேர் இணைந்து ஒரு மாத காலத்தில் 65,000 சேஃப்டி பின் (Safety Pin) எனப்படும் ஊக்குகளை சேகரித்து பந்து வடிவில் வடிவமைத்து உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்பு இந்த ஊக்கு  சேகரிப்பில் 49,000 ஊக்குகளை சேகரித்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை இந்த மாணவிகள் முறியடித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்களின் ஒருங்கிணைப்பாளரான ஆசிரியை  மனோசித்ரா கூறுகையில், ''கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான மாணவிகள் அனைவரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பணம் வாங்காமல் எப்படி தாங்களே சொந்தமாக சாதனை முயற்சி செய்யலாம் என்று சிந்தித்த போது வந்ததுதான் இந்த சிந்தனை. ஊக்கை அனைத்து பெண்களும் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் இதை எளிதில் சேகரித்து விடலாம் என்று மாணவிகள் கூறினார்கள். தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார்கள்.

இந்த ஊக்கு பந்தை (Safety Pin Ball) உருவாக்கிய பிறகு லிம்கா சாதனைக்கும், இந்தியா புக் ஆப் அவார்ட்ஸ் விருதுக்கும், கின்னஸ் விருதுக்கும் விண்ணப்பித்திருந்தாேம். தற்போது லிம்கா சாதனைக்கும், இந்தியா புக் ஆப் அவார்ட்ஸ் விருதுக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் எங்களுடைய மாணவிகளின் உழைப்பும் கல்லூரி முதல்வரின் ஒத்துழைப்பும் தான்'' என்றார் மகிழ்ச்சி பொங்க...

எந்த ஒரு சிறிய விஷயத்தையும்  வைத்து சாதனை செய்ய முயற்சிக்கலாம். அதற்கான முயற்சியை எடுத்து நீங்களும் சாதனையாளர் ஆகலாம். இதற்கு இவர்கள்தான் உதாரணம். சாதனை செய்த மாணவிகளுக்கு வாழ்த்து கூறிவிட்டு விடைபெற்றோம்.

நீங்களும் வாழ்த்துங்கள்!



சேஃப்டி பின்களை வைத்து உலக சாதனை செய்த கல்லூரி மாணவிகள்! Reviewed by Author on March 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.