டி20 ஆசியக்கிண்ணம்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா
ஆசியக்கிண்ண டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கையும் இந்தியாவும் துடுப்பெடுத்தாடியது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணத்தலைவர் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து இலங்கை அணியின் துவக்க வீரர்களாக சந்திமலும், தில்ஷனும் களமிறங்கினார்கள்.
சந்திமலை 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நெஹ்ரா பந்துவீச்சில் வெளியேற்றினார். 18 ஓட்டங்கள் எடுத்திருந்த தில்ஷன் , பாண்டியாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அதிகபட்சமாக கபுகேதரா 30 ஓட்டங்கள் குவித்தார். இறுதி கட்டத்தில் பெரேரா அதிரடியாக ஆடி 6 பந்தில் 17 ஓட்டங்களை எடுத்தார்.
இதையடுத்து 20 ஓவர் முடிவில் அந்த அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 138 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் பும்ரா, பாண்டியா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
பின்னர் 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தவான் ஒரு ஓட்டங்களிலும் ரோகித் சர்மா 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
எனினும் பின்னர் இணைந்த கோஹ்லி மற்றும் ரெய்னா பொறுப்புடன் விளையாடினர்.
25 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சனாகா பந்துவீச்சில் ரெய்னா ஆட்டமிழந்தார்.
அப்போது அணியின் எண்ணிக்கை 70 ஆக இருந்தது. பின்னர் யுவராஜ் களமிறங்கினார்.
இந்த ஜோடி அணியை வெற்றி பாதையை நோக்கி அழைத்து சென்றது.
சிறப்பாக ஆடிய யுவராஜ் 3 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 35 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மறுபக்கம் சிறப்பாக ஆடிய கோஹ்லி அரை சதமடித்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் 142 ஓட்டங்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.
கோஹ்லி 56 ஓட்டங்களுடனும் டோனி 7 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
டி20 ஆசியக்கிண்ணம்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா
Reviewed by Author
on
March 02, 2016
Rating:
Reviewed by Author
on
March 02, 2016
Rating:



No comments:
Post a Comment