உலகிலேயே மோசமான விமானங்கள் எவை? இடம்பிடித்த பிரித்தானிய விமானங்கள்!
உலகில் மோசமான விமானங்களின் பட்டியலில் பிரித்தானியாவை சேர்ந்த இரண்டு விமானங்கள் இடம்பிடித்துள்ளன.
விமான தாமதம் மற்றும் இழப்பீடு வழங்குதலினை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில் EasyJet, Virgin Atlantic ஆகிய இரண்டு விமான நிறுவனங்களும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தினை பிடித்துள்ளது.
நேரந்தவறாமையை அடிப்படையாக கொண்டு 30 விமான நிறுவனங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
அப்படி, தாமதமான விமானப்பயணம் என்றாலும் அதற்காக இழப்பீட்டினை சரியான முறையில் வழங்க வேண்டும்.
இந்த கணக்கெடுப்பை நடத்திய AirHelp கூறியதாவது, கணக்கெடுப்புக்கு உட்படுத்திய அனைத்து விமானங்களையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு பார்த்தோம், அதில், விமானத்தில் வழங்கப்படும் வசதிகள், பயணிகளிடம் ஊழியர்கள் நடந்துகொள்ளும் விதம், பயணிகளை சேர வேண்டிய இடத்திற்கு சரியான முறையில் கொண்டு சேர்க்கிறார்களா? போன்றவற்றை எடுத்துக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த கணக்கெடுப்பு குறித்து Virgin Atlantic விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது வெளியாகியுள்ள இந்த அறிக்கை குறித்து கண்டிப்பாக கேள்வி எழுப்புவோம்.
எங்களுடைய பயணிகளுக்கு தேவையானவற்றை சரியா முறையில் செய்கிறோம், மேலும் எங்களால் முடிந்த அளவு வேகமாக அவர்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதில் சிறப்பான விமானங்களின் பட்டியலில் கத்தார் எயர்வேய்ஸ் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
AirHelp's top 10 worst-performing airlines:
1. SATA
2. EasyJet
3. Virgin Atlantic
4. Swiss
5. TAP Portugal
6. Aer Lingus
7. Iberia
8. Alitalia
9. Icelandair
10. Norwegian Air Shuttle
உலகிலேயே மோசமான விமானங்கள் எவை? இடம்பிடித்த பிரித்தானிய விமானங்கள்!
Reviewed by Author
on
March 04, 2016
Rating:

No comments:
Post a Comment