மன்னார் முசலி பகுதியில் 187 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சாப்பொதிகள் மீட்பு-Photos
மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை, முள்ளிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 187 கிலோ கிராம் எடை கொண்ட கேரலா கஞ்சாப்பொதிகளை மன்னார் மாவட்ட மது வரி திணைக்கள அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை மீட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட மது வரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையிலான மது வரித்திணைக்கள உத்தியோகஸ்தர்கள் இணைந்து சிலாபத்துரை கடற்படையினரின் உதவியுடன் சிலாபத்துறை முள்ளிக்குளம் கடற்கரை பகுதியில் விசேட தேடுதல்களை மேற்கொண்டனர்.
இதன் போது சிலாபத்துரை-முள்ளிக்குளம் கடற்கரை பகுதியில் காணப்பட்ட 60 பொதிகளைக்கொண்ட கேரலா கஞ்சாப் பொதிகளை மன்னார் மாவட்ட மது வரி திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சுமார் 1 கோடி ரூபாய் 87 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேராலா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.எனினும் சந்தேக நபர்கள் எவறும் கைது செய்யப்படவில்லை எனவும்,குறித்த 187 கிலே கிராம் எடை கொண்ட கஞ்சப்பொதிகள் விசாரனைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது என து மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் முசலி பகுதியில் 187 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சாப்பொதிகள் மீட்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
March 15, 2016
Rating:
No comments:
Post a Comment