அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண சுகாதார அமைச்சுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்!


வடமாகாண சுகாதார அமைச்சுக்கு எதிராக 72 சுகாதார ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று இறங்கியுள்ளனர்.
யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலை, மாநகர சபை, கிராமிய சுகாதார ஊழியர்கள் ஆகியோரே இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.

கடந்த நான்கு நாட்களாக வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர்கள் இன்றிலிருந்து உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பல வருடங்களாக சேவையாற்றிய எங்களை ஏன் இடை நிறுத்தினீர்கள், சுகாதார தொண்டர்களாகிய எமக்கு நிரந்தர நியமனம் வேண்டும், 1997ஆம் ஆண்டில் இருந்து 2012 ஆம் ஆண்டு வரை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வாக்கை நம்பி சேவையாற்றிய எமக்கா இந்நிலமை போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப் போராட்டத்தில் மாநகர சபையை சேர்ந்த 28 பேரும் தெல்லிப்பளை வைத்தியசாலையை சேர்ந்த 33 பேரும் கிராமிய சுகாதார தொண்டர்கள் 16 பேருமாக மொத்தம் 76 பேர் ஈடுபட்டிருந்ததுடன் அவரகள் தமககு நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென மத்திய அரசில் இருந்து கடிதம் கிடைக்கப்பட்ட போதும் மாகாண அமைச்சால் எதுவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

எனவே தமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை தாம் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.





வடமாகாண சுகாதார அமைச்சுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்! Reviewed by Author on March 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.