வடமாகாண முதல்வரை சாடும் தென்மாகாண முதல்வர்....
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எந்த நிகழ்விற்கு அழைப்பு விடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறார் ஆனால் வருவதில்லை என தென்மாகான முதலமைச்சர் ஷான் விஜேலால் தெரிவித்துள்ளார்.
கடந்த மாகாண முதலமைச்சர்களின் கூட்டத்திற்கு விக்னேஸ்வரனிற்கு அழைப்பு விடுத்திருந்தோம். அவர் அழைப்பிதழினை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் தனக்கு இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டார். அத்தோடு அவர் சுகயீனம் அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
விக்னேஸ்வரன் இவ்வாறு பல நிகழ்வுகளின் அழைப்பிதழ்களை ஏற்றுக் கொண்டு வராமல் இருப்பது கவலைக்குரியது எனவும் தென் மாகாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் தெரிவித்தார்.
மேலும், கருத்து தெரிவித்த தென்மாகாண முதலமைச்சர்,
இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் தென் மாகாணத்தில் உள்ள காலி மாவட்டத்தில் இடம்பெற உள்ளது. ஆகவே, இதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எனக் கூறிக் கொண்டு சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யார் எவ்வாறு எந்தக் கூட்டத்திற்கு சென்றாலும், காலியில் இடம்பெறவிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் கட்சி உறுப்பினர்களால் நிரப்பப்பட்டு, வெற்றிகரமாக இடம்பெறவிருப்பதாகவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஷான் விஜேலால் மேலும் தெரிவித்தார்.
வடமாகாண முதல்வரை சாடும் தென்மாகாண முதல்வர்....
Reviewed by Author
on
April 25, 2016
Rating:

No comments:
Post a Comment