நாட்டின் அடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க....
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற தேசிய ஊழியர் சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் என்றோ ஒரு நாள் நாட்டின் பிரதமராக பதவிக்கு வருவார்.
உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பிரதமருக்கு அனைத்து அதிகாரங்களும் கிடைக்கும் எனவும் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஊழியர் சங்கத்தின் புதிய தலைவரான அமைச்சர் அகில விராஜ் காரியவசமும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
நாட்டின் அடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க....
Reviewed by Author
on
April 25, 2016
Rating:

No comments:
Post a Comment