பூநகரியில் அதிக வெப்பத்தால் பெண் மரணம்....
கிளிநொச்சி - பூநகரி பகுதியில் அதிக வெப்பம் காரணமாக பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கறுக்காய் தீவைச் சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தமிழ்செல்வி (வயது 43) என்ற பெண்மணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரது உடலில் நீர்த்தன்மை குறைந்துள்ளமையால் தான் குறித்த பெண் உயிரிழந்ததாக வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூநகரியில் அதிக வெப்பத்தால் பெண் மரணம்....
Reviewed by Author
on
April 04, 2016
Rating:

No comments:
Post a Comment