உண்டியல் பணத்தை திருடச் சென்றவர் தேவாலயத்துக்குள் உயிரிழப்பு...
கல்பிட்டி, பாலகுடாவ பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் புகுந்த திருடன் தேவாலயத்தின் உண்டியலை திருட முற்பட்டநிலையில் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான நபர் சனிக்கிழமையன்று தேவாலயத்தை திறந்தபோது அங்குள்ள யேசுநாதர் சிலைக்கு கீழ் மரணமான நிலையில் மீட்கப்பட்டார்
இதன்போது, அவரால் திருடப்பட்ட உண்டியல் பணமும் சிதறிக்காணப்பட்டது. இந்தநிலையில், மரணம் சம்பவித்தமைக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உண்டியல் பணத்தை திருடச் சென்றவர் தேவாலயத்துக்குள் உயிரிழப்பு...
Reviewed by Author
on
April 04, 2016
Rating:

No comments:
Post a Comment