வரவேற்பறையில் ஆபாச வீடியோ : அதிர்ச்சியான தம்பதிகள்...
மருத்துவரை பார்ப்பதற்காக, ஒரு தம்பதியினர் வைத்தியசாலை வரவேற்பறையில் காத்திருந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் ஆபாச வீடியோ ஓடிய விவகாரம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோர்டனா சுலேரு(23) என்பவர் லண்டனில் வசித்து வருகிறார். அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இவருக்கு சமீபத்தில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், இவரும் இவரது கணவரும் மருத்துவரை சந்திக்க, லண்டனின் வடக்கு பகுதியில் இருக்கும் நார்த்விக் பார்க் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் வைத்தியசாலை வரவேற்பறையில் காத்திருக்க வைக்கப்பட்டனர். அப்போது அங்கு இருந்த தொலைக்காட்சியில், ஆபாச படம் ஓடிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட அந்த தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்த சுலேரு “அந்த சம்பவம் மிகவும் அருவருக்கத்தக்கது. இது பற்றி யாரிடமாவது கூற முயன்றேன். ஆனால், அங்கு ஒருவரும் இல்லை” என்று கூறியுள்ளார்.
இதுபற்றி கேள்விபட்ட வைத்தியசாலை நிர்வாகம், தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியில், வயது வந்தவர்களுக்கு மட்டுமான அந்த நிகழ்ச்சியை, எங்கள் ஊழியர் பார்க்கவில்லை. பார்த்திருந்தால், அவர் அந்த சேனலை மாற்றியிருப்பார். இருந்தாலும், இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.
வரவேற்பறையில் ஆபாச வீடியோ : அதிர்ச்சியான தம்பதிகள்...
Reviewed by Author
on
April 12, 2016
Rating:

No comments:
Post a Comment