மீளப் பயன்படுத்தக்கூடிய பால்கன் 9 ஏவுகணை வெற்றிகரமாக சமுத்திர தளத்தில் மீள தரையிறக்கம்
அமெரிக்க ஸ்பேஸ் எக்ஸ் கம்பனியால் ஏவப்பட்ட மீளப் பயன்படுத்தக்கூடிய ஏவுகணையானது வெற்றிகரமாக சமுத்திர தளமொன்றில் தரையிறங்கியுள்ளது.
அந்த கம்பனியால் இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட 4 முயற்சிகள் தோல்வியைத் தழுவியிருந்தன. பால்கன் 9 ஏவுகணையானது அமெரிக்க புளோரிடா மாநிலத்திலுள்ள கனாவெரல் விண்கல ஏவுதளத்திலிருந்து டிரகன் விண்கலத்தின் சகிதம் அந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு ஏவப்பட்டது.
இந்நிலையில் விண்கலத்தை விண்வெளிக்கு எடுத்துச் சென்ற குறிப்பிட்ட ஏவுகணை, பின்னர் அதிலிருந்து பிரிந்து நாசா விண்வெளி நிலையத்தின் சமுத்திரத்தில் மிதக்கும் தளமொன்றில் தரையிறங்கியுள்ளது.
டிரகன் விண்கலம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. அந்த ஏவுகணை வெற்றிகரமாக மிதக்கும் தளத்தில் தரையிறங்கியதும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கலிபோர்னிய ஹாவ்தோர்ன் நகரிலுள்ள கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்த அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் 'அமெரிக்கா, அமெரிக்கா, அமெரிக்கா' என கோஷம் எழுப்பியவாறு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இது மீள உபயோகப்படுத்தக் கூடிய ஏவுகணைகள் தொடர்பான வரலாற்றின் புரட்சிகர ஆரம்பமாக கருதப்படுகிறது.
மீளப் பயன்படுத்தக்கூடிய பால்கன் 9 ஏவுகணை வெற்றிகரமாக சமுத்திர தளத்தில் மீள தரையிறக்கம்
Reviewed by Author
on
April 12, 2016
Rating:

No comments:
Post a Comment