கிழக்கு மாகாண சபையினால் கைவிடப்பட்டுள்ள நூலகம்
மட்டக்களப்பின் ஏறாவூர் பற்று பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ் செயற்பட்டுவரும் வந்தாறுமூலை பொதுநூலகத்திற்கான கட்டட நிர்மாண பணிகள் கடந்த சில வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
கிழக்கு மாகாண சபையின் கடந்தகால சபையினது ஆட்சியின் போது ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் இதனது பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த கிழக்கு மாகாணசபை அரசாங்கம் இதனை கைவிட்டுள்ளது.
யுத்தத்தின் பிடியில் அதிகமாக பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் வசிக்கும் தமிழ் கிராமத்தின் இந்நிலை மிகவும் கவலைக்குரியதாகும்.
கட்டட பணிகள் ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில் கவனிப்பாரற்று கிடக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்கிறது. கடந்த நான்கு வருடங்களாக சாதாரண ஒரு வீட்டில் தற்காலிகமாக இந்நூலகம் இயங்கி வருகிறது.
அங்கு மாணவர்கள் கற்பதற்கான வசதிகள் ஒரு துளியேனும் இல்லை. பத்திரிகை வாசிப்பதற்கு கூட போதிய வசதிகள் இல்லை.
முன்னைய கிழக்கு மாகாண அரசாங்கத்தின் நிர்வாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தினை இன்றைய கிழக்கு மாகாணசபை கைவிடாமல் பூரணப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
அதேபோன்று, தொடர்ச்சியாக நான்கு வருட காலங்களாக எவ்வித வசதியுமின்றி இயங்கிக் கொண்டிருக்கும் குறித்த பொதுநூலகத்தை இக்கட்டிடத்தில் விரைவில் இயங்கச் செய்வதற்கான முயற்சிகளை அரச நிர்வாகிகளும் அரசியல் பிரமுகர்களும் அரசாங்கமும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கிழக்கு மாகாண சபையினால் கைவிடப்பட்டுள்ள நூலகம்
 
        Reviewed by Author
        on 
        
April 29, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
April 29, 2016
 
        Rating: 


No comments:
Post a Comment