மன்னார் மாவட்டத்தில் இன்று உலக முட்டாள் தினத்தினை புகைபுடிப்பாளர்களின் பிறந்த தினமாக கொண்டாடியது....
மன்னார் மாவட்டத்தில் இன்று உலக முட்டாள் தினத்தினை புகைபுடிப்பாளர்களின் பிறந்த தினமாக கொண்டாடியது மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு சபைகளின் ஒன்றியமும் மது போதைப்பொருள் தகவல் மையமும் கொழும்பு இணைந்து இவ்நிகழ்வை இன்று 01-04-2016 காலை 10.00 மணிக்கு மன்னார் அரசபேரூந்து தரிப்பிடத்தில் மிகவும் சிறப்பாக நடாத்தியது.
வருடா வருடம் நடத்தப்படுகின்ற இவ்நிகழ்வானது இம்முறையும் 08வது தடவையாக இலங்கையின் எல்லாப்பாகத்திலும் நடைபெறுகின்றது அதன் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்திலும்….
தனது உழைப்பின் மூலம் பெறும் பணத்தினை புகைத்தல் மதுப்பாவனை போன்றவற்றிற்கு செலவு செய்பவர்கள் முட்டாள்களே அவர்களின் முட்டாள் தனத்தினை உணர்த்துவதற்காகவே வருடாவருடம் இவ்நிகழ்வினை மேற்கொண்டு வருகின்றோம்.
உழைப்பின் மூலம் பெறும் பணத்தினால் வீணாக புகைத்தல் மதுபானம்போன்ற வற்றினால் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பாதிக்க்படுகின்றவர்களை விழிப்புனர்வு பெறுவதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏப்பிரல் 01 எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டியவாறும் துண்டுப்பிரசுரங்கள் எல்லோருக்கும் கொடுத்தும் மக்களின் மனங்களில் விழிப்புனர்வு ஏற்படுத்தும் செயற்பாடு பாராட்டுக்குரியது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்- மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு சபைகளின் ஒன்றியம்
நிதிப்பங்களிப்பு-மது போதைப்பொருள் தகவல் மையம் கொழும்பு இலங்கை…
மன்னார் மாவட்டத்தில் இன்று உலக முட்டாள் தினத்தினை புகைபுடிப்பாளர்களின் பிறந்த தினமாக கொண்டாடியது....
Reviewed by Author
on
April 01, 2016
Rating:
Reviewed by Author
on
April 01, 2016
Rating:


No comments:
Post a Comment