மன்னார் தேவன் பிட்டி கல்வி சமூகத்தை சீரழிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் அணிதிறண்டு கோரிக்கை(படம்)
மடு வலயக்கல்வி அலுவலகர் பிரிவுக்குற்பட்ட மன்-தேவன் பிட்டி பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளையும்,பாடசாலையின் வளர்ச்சியினையும் திட்டமிட்டு பின்னடைய செய்யும் முயற்சிகள் இடம் பெற்று வருவதாக தேவன் பிட்டி புனித சவேரியார் கடற்தொழில் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளனர்.
இப்பிரச்சினை குறித்து தேவன் பிட்டி புனித சவேரியார் கடற்தொழில் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கிராமத்தைச் சேர்ந்த நூற்றக்கணக்கானவர்கள் ஒன்றிணைந்து நேற்று வியாழக்கிழமை மதியம் ஆண்டங்குளத்தில் அமைந்துள்ள மடு வலயக்கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு நீதி கேரினர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் குறித்த மக்கலோடு கலந்துரையாடி மடு வலயக்கல்விப்பணிப்பாளருடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த மக்கள் மேலும் தெரிவிக்கையில்,,,,
அண்மைக்காலங்களில் மன்-தேவன் பிட்டி ஆரம்ப பாடசாலையின் அதிபர் திருமதி ப.யூட்டஸ் அவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் அசம்பாவிதங்கள் எமது பாடசாலையை மட்டுமல்ல எமது சமூகத்தையும் பாதீப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில் எமது ஆரம்ப பாடசாலையின் அதிபர் குறித்து அனுப்பப்படுகின்ற முறைக்கேடான,உரிமை கோரப்படாத கடிதங்கள் பற்றியும்,அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ள முடியாத ஜீரணிக்க இயலாத நடைமுறைக்கு சாத்தியமற்ற பல விடையங்கள் குறித்து எமது சமூகம் விசனமடைந்த நிலையில் குறித்த கடிதங்களின் பிரதிகளையும் ஏற்கனவே தங்களின் பார்வைக்கு அனுப்பி வைத்தோம்.
இருந்த போதும் ஆரம்ப பாடசாலையின் அதிபர் மட்டிலும்,எமது சமூகம் மட்டிலும் தாங்கள் அக்கறையின்றியும்,மாற்று நடவடிக்கை எடுக்க விரும்பாததையும் நினைத்து எமது சமூகம் வேதனையும்,விரக்தியும் அடைந்திருக்கின்றது.
மேலும் கடந்த 23-08-2015 அன்று காலை தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் ஏற்பட்ட முறைக்கேடுகள் தொடர்பான கடிதத்தை எழுதி கையொப்பமிட்டுள்ள ம.தர்மலிங்கம் என்பவர் எமது கிராமத்தில் எந்த காலத்திலும்,எவ்வித பதிவுகளுக்கும் உட்படாதவர் என்பதும் இவருக்கும்,இக்கடிதத்திற்கும் உள்ள தொடர்பும், இக்குற்றச்சாட்டு தொடர்பில் எமக்கு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
-எனவே குறித்த தனி நபரினால் முன் வைக்கப்பட்ட ஆரம்ப பாடசாலை அதிபர் மீதான் பொய்க்குற்றச்சாட்டு மிகவும் உண்மைக்கு புறம்பான செயற்பாடாகவும்,பழிவாங்கும் நோக்கத்துடனும் எழுதப்பட்டதாக எமது சமூகம் கருதுகின்றது.
-இவ்விடையம் தொடர்பாக மாணவர்களிடம் விசாரித்த போது அவ்வாறான முறையற்ற பரீட்சைகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை தரம் 06 இல் தற்பொது கல்வி கற்கும் மாணவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
-எனவே எமது சமூகத்திடம் எழுந்துள்ள கேள்வி என்ன வெனில் கடந்த 23-08-2015 அன்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான முறைக்கேட்டை உடன் அறிவிக்காமல் தாமதித்து சுமார் 7 மாதங்கள் கடந்த பின் தங்களுக்கு முறையிட்டுள்ளார்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன?
--அது புரியாத புதிராகவே உள்ளது.இதன் பிரகாரம் இவ் முறைக்கேடு தொடர்பாக சம்மந்தப்பட்ட ம.தர்மலிங்கம் என்பவர் உண்மையில் இனம் காணப்பட்ட ஒரு நபரா? ஏன்பதனை உறுதிப்படுத்தி அவரை எமது சமூகத்தின் நேரடி விசாரனைக்கு உற்படுத்துமாறு தயவாக கேட்டுள்ளோம்.
-மேலும் எமது இடை நிலை பாடசாலையில் அதிபருக்கான கடமைகளை நிறைவேற்றும் சி.பத்மதாசன் ஆசிரியர் அவர்கள் கடந்த 10 வருடங்களாக ஆசிரியராகவும்,அதிபர் தகமை இல்லாமல் அதிபராகவும் எமது பாடசாலையில் தொடர்ச்சியாக சேவையில் இருந்து வருகின்றார்.
-தற்போதைய காலத்தில் அவரின் செயற்பாடுகள் பாடசாலை வளர்ச்சிக்கும்,மாணவர்களின் கல்விக்கும் இடையூறாக இருப்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
-அண்மைக்காலமாக எமது கிராமத்தில் படிக்க வேண்டிய வயதில் இடை விலகிய மாணவர்களின் எண்ணிக்கை முப்பதை எட்டியுள்ளது.இவர்களில் பலர் தொடர்ச்சியாக பல வருடங்களாக வகுப்பேற்றப்படாதவர்களும் அடங்குகின்றனர்.
மாணவர்களுக்கு எதிரான சில துஸ்பிரையோகங்கள் குறிப்பாக பாலியல் மற்றும் உளப்பாதீப்புக்குற்படுத்தும் வார்த்தைப்பிரையோகங்கள்,மட்டு மீறிய தண்டணைகள் வழங்கப்பட்டவை என்பன இனம் காணப்பட்ட முறைப்பாடுகளாகும்.
-கடந்த வருடம் இடம் பெற்ற கா.பொ.த.சாதாரண தர பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களை விரும்பிய பாடசாலைகளுக்குச் சென்று கல்வியை தொடர உற்சாகப்படுத்தி அண்மையில் ஆராம்பிக்கப்பட்ட எமது பாடசாலையின்; உயர் தர வகுப்புக்களை நிறுத்த மறைமுகமாக இவர் எடுத்த முயற்சிகளும் எமக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
-குறித்த பிரச்சினைகளை உடன் பகிரங்கப்படுத்தாது சமாளிக்க நினைத்த எமது நீண்ட கால பிரச்சினைகள் என்பதனை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
-எனவே மது கல்வி சமூகத்தின் கவலைக்கிடமான குறித்த நிலையினை கருத்தில் கொண்டு எமது பாடசாலையின் வளர்ச்சியில் அக்கரையும் கரிசனையும் கொண்டு தூர நோக்குடன் சிந்தித்து செயற்படும் அதிபர் தகுதியுடைய அதிபர் ஒருவரை உடனடியாக நியமித்து எமது கல்விசமூகத்தை கட்டியெழுப்ப உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பிரச்சினைகள் குறித்து டு பின்னடைய செய்யும் முயற்சிகள் இடம் பெற்று வருவதாக தேவன் பிட்டி புனித சவேரியார் கடற்தொழில் அமைப்பு,கிராம மக்கள் ஆகியோர் இணைந்து மடு வலயக்கல்வி பணிப்பாளர், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோருக்கு தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
-01-4-2016

Reviewed by NEWMANNAR
on
April 01, 2016
Rating:

No comments:
Post a Comment