அண்மைய செய்திகள்

recent
-

விடுதலைப் புலிகளின் முன்னாள் திருமலை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் திருமலை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கலையரசன் நேற்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட தற்கொலைத் தாக்குதல் அங்கி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

முன்னதாக இதே நோக்கத்தில் விடுதலைப் புலிகளிள் முன்னாள் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி ராம் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள கலையரசன் என்பவர் ராமின் நெருங்கிய சகா என்றும் இருவரும் இணைந்து பல தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள கலையரசன் எனும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் வன்னி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடையவோ, புனர்வாழ்வுக்கு உட்படவோ இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தனது மனைவி பிள்ளைகளுடன் திருகோணமலையில் வசித்துக் கொண்டிருந்த அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி தற்கொலைத் தாக்குதல் அங்கி தொடர்பாக இதுவரை விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் திருமலை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கைது! Reviewed by NEWMANNAR on April 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.