சனல்4 வெளியிட்ட புகைப்படத்தில் எனது கணவன்! மனைவி வாக்குமூலம்
சரணடைந்த எனது கணவரை, ஆடைகளைக் களைந்து இராணுவத்தினர் அழைத்துச் செல்கின்ற மற்றும் கிடங்கு ஒன்றின் அருகில் உட்கார வைத்துள்ள புகைப்படங்கள் சனல் - 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.
இராணுவத்தில் சரணடைந்து காணாமற்போன கண்ணன் என்று அழைக்கப்படும் ஞானச்செல்லம் உதயராசா (காணாமற்போகும் போது வயது 40) என்பவரின் மனைவி அருந்தவச்செல்வி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இரண்டாவது நாளாக இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்த குறித்த பெண் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
விடுதலைப் புலிகள் அமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினராகவிருந்த எனது கணவர் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இராணுவத்தில் சரணடைந்தார்.
நானும் எனது இரண்டு பிள்ளைகளும் அதனை நேரில் கண்டோம். அதன் பின்னர் கணவர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சனல் - 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட யுத்தக்குற்ற ஆவணப் புகைப்படம் எனக்கு கிடைத்தது.
அதில் எனது கணவர் ஆடைகள் களையப்பட்ட நிலையில் இராணுவத்தினர் அழைத்து வருவது மற்றும் கிடங்கு ஒன்றின் அருகில் உட்கார வைத்திருப்பது தொடர்பான புகைப்படங்கள் உள்ளன.
இராணுவத்தினர் எனது கணவரைப் பிடித்து வைத்திருந்து சித்திரவதை செய்ததற்கான ஆதாரங்களாக இவை காணப்படுகின்றன.
இராணுவத்தினரே எனது கணவரை வைத்துள்ளனர். கணவரை மீட்டுத் தாருங்கள் என ஆணைக்குழு முன்னிலையில் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது புகைப்படங்களை பார்த்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் எவ்வித பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
April 27, 2016
Rating:

No comments:
Post a Comment