அண்மைய செய்திகள்

recent
-

முதியோர் இல்லத்தில் தீ விபத்து 16 பேர் உயிரிழப்பு


உக்ரைன் நாட்டில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் தலைநகர் கீவ் அருகேவுள்ள கிரமாம் ஒன்றில் உள்ள முதியவர் இல்லத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 35 பேர் இருந்த அந்த கட்டடத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டது.


அவசர சேவை மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அவசரநிலை அமைச்சகம் தெரிவித்துள்ளாது.

விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதியவர்கள் 16 பேர் உயிரிழந்த இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் விளாதிமீர் குரோஸ்மேன் இரங்கல் தெரிவித்துள்ளார்
முதியோர் இல்லத்தில் தீ விபத்து 16 பேர் உயிரிழப்பு Reviewed by NEWMANNAR on May 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.