அண்மைய செய்திகள்

recent
-

கொலைக்களமாக மாறியுள்ள மன்னார் பொது வைத்திசாலை ----மீண்டும் ஒரு உயிர் பலி-Photos

தலைமன்னார் கிராமத்தினை வசிப்பிடமாக கொண்டவரும் மருத்துவமனை ஊழியருமாகிய ரோகினி தமிழரசன் வயது 39 இரண்டு பிள்ளைகளின் தாய் என்பவர் மன்னார் பொது வைத்திசாலையில் நேற்று மாலை கல்லடைசல் காரணமாக அகற்றுவதற்கான சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பித்தப்பையில் சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்காக   இன்று காலை 8 மணிக்கு சத்திரசிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்ட  ரோகினி தமிழரசன் என்பவருக்கு மயக்கமருந்து கொடுத்த பின்பு வயிற்றுப்பகுதியில் இரண்டு சிறு துவாரங்கள் இடப்பட்டு 5Mல் ஊசி ஏற்றப்பட்டதாகவும் அவ்வேளையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ரோகினி தமிழரசன் இறந்ததாக மருத்துவர்கள் விளக்கமளிக்கின்றனர்...

இருப்பினும் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களும் சக மருத்துவ ஊழியர்கள் மருத்துவர்கள் மீதும் வைத்தியசாலை நிர்வாகத்தின் மீதும் சந்தேகமும் அவநம்பிக்கையும் கொண்டுள்ளனர்.

காரணம் என்னவெனில் காலையிலே 9.30 மணிக்கு ரோகினி தமிழரசன் இறந்து விட்டதாகவும் தகவல் 11மணிக்குத்தான் சொன்னதாகவும் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை பயங்கர பொலிஸ்காவல் போட்டுள்ளனர் இதன் உள்நோக்கம் வைத்தியரின் தவறான மருந்து மற்றும் ஊசி ஏற்றியதன் விளைவாகத்தான் .இந்த மரணம் ஏற்பட்டுள்ள்து.

ரோகினி தமிழரசன் வேறு யாரும் அல்ல மன்னார் பொது வைத்திசாலையில் 15 வருடமாக கடமையாற்றி தற்போது மாற்றலாகி தலைமன்னார் வைத்தியசாலையில் பணிபுரியும் மருத்துவதாதி அத்தோடு இரண்டு பிள்ளைகளின் தாயுமாவார்.

இவரின் உடலை வாங்கமறுக்கும் உறவினர்களும் உடன் வேலை செய்யும் சக தாதியர்களும் உண்மையான காரணத்தினையும் போஸ்மோட்டத்தினை தங்களுக்கு முன்னிலையில் செய்யசொல்லி கேட்கின்றனர். மன்னார் நீதாவானும் பொலிஸாரும் விசாரனைகள் மேற்கொண்டுவருகின்றனர்

தனது ஊழியர்களுக்கே இந்த நிலைமை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலையோ......!!!!!!!
  • மன்னார் பொதுவைத்திய சாலையில் பணிபுரியும் வைத்தியர்கள் முழுமையான வைத்தியர்கள் இல்லை பயிற்சி பெறும் வைத்தியர்கள் தான்
  • மொழிப்பிரச்சினை பெரும் பிரச்ச்னை
  • கல்வித்தகுதியும் புலமையும் இல்லாதவர்களா....???
  • கடமையுணர்வும் இல்லை.... சேவைமனப்பான்மையும் இல்லை.....
மன்னாரின் தூண்களே வன்னிமாவட்ட அமைச்சர்களே பாராளுமன்ற உறுப்பினர்களே வடமாகாண அமைச்சர்களே உறுப்பினர்களே என்ன செய்வதாக உத்தேசம் உங்கள் உறவினருக்கு வரும் வரை பார்த்துக்கொண்டு இருக்கப்போகிறீர்களா....

இன்று நேற்றல்ல இப்படி இன்னும் எத்தனை உயிர்களை பலிகொடுக்கப்போகிறோமோ...... தெரியவில்லை  நாம் இன்னும் ஒன்று சேரவில்லை ஒற்றுமையாக.....

வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களே ,வடமாகாண உறுப்பினர்களே அமைச்சர்களே ,  வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் , அவர்களே என்ன நடடிக்கை எடுக்க போறீர்கள்.


 
 





















தொடர்புடைய செய்தி

25-04-2016 அன்று மன்னார் பொதுவைத்திய சாலையின் கடமைபுரியும் சில வைத்தியர்களின் அசமந்தப்போக்கும் கவனயீனமும்….நடந்தது என்ன?.. முழுமையான தகவல் 

http://www.newmannar.com/2016/05/Mannar_20.html

கொலைக்களமாக மாறியுள்ள மன்னார் பொது வைத்திசாலை ----மீண்டும் ஒரு உயிர் பலி-Photos Reviewed by Author on May 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.