அண்மைய செய்திகள்

recent
-

’என்னிடம் வாருங்கள்….வேலை தருகிறேன்’: ஒபாமாவுக்கு தகவல் அனுப்பிய இஸ்லாமியர்...


இஸ்லாம் மதத்தை பற்றி நன்கு புரிந்துக்கொள்ள அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா தன்னிடம் வேலைக்குவர வேண்டும் என துபாய் நாட்டைசேர்ந்த இஸ்லாமிய வழக்கறிஞர் ஒருவர் தகவல் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 250 நாட்களே உள்ள நிலையில், அவருக்கு புதிய வேலை வாய்ப்பு வழங்க இஸ்லாமிய வழக்கறிஞர் ஒருவர் முன் வந்துள்ளார்.

துபாய் நாட்டை சேர்ந்த Eisa Bin Haidar என்ற வழக்கறிஞர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஊடகங்கள் இஸ்லாம் ஒரு பயங்கரவாத மதம் என்ற அடிப்படையிலேயே அடிக்கடி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஆனால், இது உண்மையில்லை. சகிப்புத்தன்மை, புரிதல், மன்னித்தல் மற்றும் எந்த மதத்தினரையும் ஏற்றுக்கொள்ளும் உயர் கொள்கைகளை உடைய மதம் தான் இஸ்லாமியம்.

இதனை நன்கு புரிந்துக்கொள்ள அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவிற்கு அவரது பதவிக்காலம் முடிந்தவுடன் எனது சட்ட அலுவலகத்திலேயே ஒருவேலை தருகிறேன்.

ஊதியத்துடன் இங்கு அரேபிய நாடுகளுக்கு இலவசமாக விமானங்களில் ஒபாமா பயணம் செய்யவும் ஏற்பாடு செய்கிறேன்.

இந்த நாடுகளை சேர்ந்த மக்களிடம் அவர் நெருங்கி பழகினால், இஸ்லாம் மதத்தின் உண்மையான கோட்பாடுகளையும், இந்த நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மக்களின் உயர் பண்புகளையும் ஒபாமா எளிதில் புரிந்துக்கொள்வார்.

நான் தரும் இந்த வேலைவாய்ப்பு ஒபாமாவிற்கு வியக்கத்தக்கதாக இருந்தாலும் கூட, ஒரு மதத்தை பற்றி தவறான கருத்துக்களை பரப்பப்படுவதை அவர் புரிந்துக்கொள்ளவே இந்த வேலையை தருகிறேன்’என Eisa Bin Haidar அந்த பதவில் குறிப்பிட்டுள்ளார்.


’என்னிடம் வாருங்கள்….வேலை தருகிறேன்’: ஒபாமாவுக்கு தகவல் அனுப்பிய இஸ்லாமியர்... Reviewed by Author on May 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.