இலங்கைத் தமிழ் மாணவருக்கு கனேடிய அதி உயர் கெடட் விருது!
இலங்கைத் தமிழ் மாணவர்க்கு கனேடிய அதி உயர் கெடட் விருது வழங்கப்பட்டுள்ளது.
அமோஸ் டன்ஸ்டன் என்ற இலங்கைத் தமிழ் மாணவரே இவ்வாறு கனேடிய அதி உயர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹார்பரினால் அண்மையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
கனேடிய கெடட் விருதுகளில் அதி உயர் விருதாகக் கருதப்படும் Lord Strathcona Award விருது அமோஸிற்கு வழங்கப்பட்டுள்ளது.
உடல் பயிற்சி மற்றும் இராணுவப் பயிற்சிகளில் அதி உச்ச திறமைகளை வெளிப்படுத்தும் கெடட் வீரர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட அமோஸ் தற்போது கனேடிய பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.
மணி டன்ஸ்டன் - மேரி டண்ஸ்டன் ஆகியோரின் சிரேஸ்ட புதல்வாரன அமோஸ் American Football விளையாட்டிலும் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழ் மாணவருக்கு கனேடிய அதி உயர் கெடட் விருது!
Reviewed by Author
on
May 31, 2016
Rating:

No comments:
Post a Comment