சாதனை படைத்த தமிழச்சி! இவருக்கு ஒரு சல்யூட் போடலாமே
தென்னைமரம் ஏறி தேங்காய் பறிப்பது பாரம்பரியமாக ஆண்களுடைய தொழிலா? மரம் ஏறுவது பெண்களுக்கு முடியாத, பொருந்தாத வேலையா? இந்த கேள்விகளுக்கு விடையாக நிற்கிறார் பாரதி.
ஆண்கள் படித்துவிட்டு பெரிய நகரங்களுக்கும் வேறு நாடுகளுக்கும் வேலைக்கு சென்றுவிடுகின்றனர். அதனால், கிராமங்களில் ஆண்கள் செய்த விவசாயம் உட்பட்ட பல வேலைகள் வெற்றிடமாகி பெண்கள் செய்வதற்கான அவசியத்தை கொடுத்துள்ளது.
அதை பெண்களும் ஆரம்பத்தில் சில தடுமாற்றங்களோடு கற்றுக்கொண்டு பிறகு, அதில் சாதனையே படைக்கிறார்கள்.
பிபிசியில் பரபரப்பான பாரதி
உலகின் பிரபல ஊடகமான ’பிபிசி’ யில் செய்தியாகும் அளவில் ஒருநாளைக்கு பல தென்னை மரங்களில் ஏறி, தேங்காய் பறிக்கும் தொழில் செய்து சாதனை படைத்துள்ளர் பாரதி என்ற தமிழ்நாட்டுப் பெண்.
12 மீட்டர்(40அடி) உயரமுள்ள தென்னைமரத்தில் 2 நிமிடத்தில் உச்சிக்கு ஏறிவிடுகிறார். ஒருநாளைக்கு 50 மரங்கள் வரை ஏறி தேங்காய் பறிக்க முடிந்த இவர் வறட்சி காரணமாக 10- 20 மரங்கள் மட்டுமே ஏறி வருவதாக கூறுகிறார்.
பெண்களே வியந்தனர்
இவர் ஆரம்பத்தில் மரம் ஏறும்போது சில காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதை எளிதாகவே எடுத்துக்கொண்டு, இப்போது மரம் ஏறுவதில் சிறந்த திறமையாளாராக நிரூபித்திருக்கிறார்.
படித்துவிட்டு கிராமத்திற்கு வந்தபோது பெண்கள் தென்னைமரம் ஏறமுடியாது என பெண்களே கூறினர். நான் உடலில் சிராய்ப்புகள் ஏற்படாமல் மரமேறுவதை பார்த்த பிறகு, அவர்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டனர்.
மரம் ஏறுவதை கிண்டலும் கேலியும் செய்த அக்கம்பக்கத்தினர் இப்போது மரம் ஏறும் வாய்ப்பை அதிகம் எனக்கு வழங்குகிறார்கள்.
பாதுகாப்பு
மரம் வேகமாக ஏறுவதற்கு ஆண்கள் பயன்படுத்தும் பெல்ட் போன்ற கருவியை பயன்படுத்தும் இவர், மற்ற மரங்களில் ஏறுவதைவிட தென்னை எளிது என்கிறார். அதற்காக விசேஷ உடைகள் ஏதும் அணிவதில்லை.
ஆனால் சேலை அணிவதில்லை. சேலை என்னை மரத்திலிருந்து கீழே தள்ளிவிடும். மரத்திலிருந்து இறங்கும் போது கொஞ்சம் உராயும் கை மற்றும் கால்கள் வலிமையோடு இருப்பது நல்ல ஒத்துழைப்பு என்கிறார்.
மரத்தின் உச்சியிலிருந்து தேங்காய் பறிக்கும்போது கீழே பார்க்க பயமாக இல்லையா என கேட்டால் அந்த பயம் இல்லை. ஆனால், விஷவண்டுகள் மற்றும் பூச்சிகளை கவனிப்பதில் எச்சரிக்கையாக இருப்பேன் என்கிறார்.
டாக்டராக்கும் லட்சியம்
37 வயதாகும் இந்த விதவைப் பெண்ணின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன் இறந்துள்ளார். அதனால், சுயமாக குடும்பபாரத்தை சுமக்கிறார்.
விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தன் கணவர் இறந்த பிறகு, தையல் வேலை உட்பட பல வேலைகள் செய்து குடும்பத்தை பாதுகாக்கிறார்.
தன் மகளை படிக்கவைக்கிற பாரதி, மகளின் டாக்டர் கனவை நிஜமாக்குவதே தனது லட்சியம் என்கிறார்.
முயன்றால் முடியாதது எதுவுமில்லை ஆண்களால் செய்யக்கூடியது எல்லாமே பெண்களுக்கும் சாத்தியம்தான் என்பதை பெண்கள் முயற்சி செய்யும் போதெல்லாம் காட்டும் வெற்றி முகமே அறிவிக்கிறது.
சாதனை படைத்த தமிழச்சி! இவருக்கு ஒரு சல்யூட் போடலாமே
Reviewed by Author
on
May 31, 2016
Rating:

No comments:
Post a Comment