இலங்கையையும் விட்டுவைக்காத வேர்ஜின்!
பிரித்தானியாவில் பெரும் தனவந்தர்களுள் ஒருவரான சேர் ரிச்சர்ட் பிரன்சனின் வேர்ஜின் குரூப் நிறுவனத்தின் பார்வை இலங்கையின் பக்கமும் திரும்பியிருப்பது உறுதியாகியுள்ளது.
வேர்ஜின் எயார்லைன்ஸ், வேர்ஜின் ரயில், வேர்ஜின் இன்ரநெட், வேர்ஜின் மொபைல், வேர்ஜின் தொலைக்காட்சி மற்றும் பல வர்த்தகங்கள் உட்பட சுமார் 400 நிறுவனங்களைக் கொண்ட வேர்ஜின் குழுமம் இலங்கையில் முதலிடுவதற்கான ‘தகுந்த’ வாய்ப்பு வரும் வரை காத்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், இலங்கையில் யுத்த நிறைவின் பின் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக உள்நாட்டு சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மேலும் சில முன்னேற்றத்தை எதிர்பார்த்திருப்பதாக அவர் தெரிவித்துள்ள அதேவேளை ரிச்சர்ட் பிரன்சனை இலங்கையில் முதலிட வைப்பதற்கான முயற்சிகளும் அரச தரப்பிலிருந்தும் மேற்கொள்ளப்படுவதாக அறியமுடிகிறது.
இலங்கையையும் விட்டுவைக்காத வேர்ஜின்!
Reviewed by Author
on
May 13, 2016
Rating:

No comments:
Post a Comment