ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவரும் இந்தியாவினால் அழைக்கப்பட்டமை முன்னேற்றமான செயல்!- தமிழ் தேசிய கூட்டமைப்பு...
இந்தியாவின் கும்பமேளா நிகழ்வுக்கு இலங்கையின் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவர்ஆர் சம்பந்தனும் அழைக்கப்பட்டுள்ளமையானது, அரசியலில் குறிப்பிடத்தக்க விடயம் என்றுதமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனும் இராஜதந்திர வரப்பிரசாதஅடிப்படையில் அழைக்கப்படவில்லை.
எனினும் இலங்கையின் முதல் பொதுமகன் என்ற அடிப்படையில் ஜனாதிபதியையும், தமிழர்களுக்குதலைவர் என்ற அடிப்படையில் சம்பந்தனையும் இந்தியப் பிரதமர் அழைத்துள்ளதாக நாடாளுமன்றஉறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தமிழர்களுடன் சிறந்த உறவு பேணப்படுகிறது என்பதை காட்டுவதற்காக செய்யப்பட்டுள்ளது.இது அரசியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்ற செயற்பாடு என்றும் சுமந்திரன்தெரிவித்துள்ளார்.
இந்தநிகழ்வில் பங்கேற்குமாறு சம்பந்தனுக்கு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சௌஹான், இந்திய பிரதமரின் சார்பில் சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகசுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக சம்பந்தன் நேற்று உஜாய்னுக்கு புறப்பட்டுசென்றுள்ளார்.
ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவரும் இந்தியாவினால் அழைக்கப்பட்டமை முன்னேற்றமான செயல்!- தமிழ் தேசிய கூட்டமைப்பு...
Reviewed by Author
on
May 13, 2016
Rating:
Reviewed by Author
on
May 13, 2016
Rating:


No comments:
Post a Comment