களுத்துறை மாவட்டத்தில் 100 வயதைத் தாண்டிய 45 பேர் வாழ்கின்றார்கள்
களுத்துறை மாவட்டத்தில் 100 வயதைத் தாண்டிய 45 பேர் வாழ்கின்றார்கள் என களுத்துறை தேர்தல் காரியாலய புள்ளி விபரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
2015ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 1910ம் ஆண்டுமுதல் 1913ம் ஆண்டு வரையில் பிறந்தவர்கள் இவ்வாறு வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ளனர்.
வாக்காளர் தினத்தை முன்னிட்டு களுத்துறை மாவட்ட தேர்தல் காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் 104 வயதுடைய ஐந்து பேருக்கு விசேட பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் அண்மையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
களுத்துறை மாவட்டச் செயலாளர் யூ.டி.சீ ஜயலால், முன்னாள் மாவட்டச் செயலாளர் அன்ட்ரூ டி சில்வா, களுத்துறை பிரதித் தேர்தல் ஆணையாளர் ரசிக பீரிஸ் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
களுத்துறை மாவட்டத்தில் 100 வயதைத் தாண்டிய 45 பேர் வாழ்கின்றார்கள்
Reviewed by Author
on
June 16, 2016
Rating:

No comments:
Post a Comment