நெடுங்கேணியில் காணாமல் போன 17 வயது மாணவி மீட்பு....
கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடுவைச்சேர்ந்த 17 வயது மாணவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தாயார்தெரிவித்துள்ளார்.
ஒலுமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரகுமார் கிருசாந்தினி (வயது 17) என்ற மாணவி தனதுதையல் பயிற்சி வகுப்புக்காக வவுனியாவிற்கு சென்று பொருட்களை வாங்கி வருவதாககடந்த சனிக்கழமை சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.
இது தொடர்பில் அன்றையதினமே நெடுங்கேணி பொலிசில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் குறித்த மாணவி வவுனியா,சுந்தரபுரம் பேரூந்தில் பயணித்த போது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுமீட்கப்பட்டதுடன் நெடுங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணைகளைமேற்கொண்டுள்ள நெடுங்கேணி பொலிசார் தற்போது மாணவியை வவுனியா வைத்தியசாலையில்அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் தொடர்ந்துமேற்கொண்டு வருகின்றனர்.
நெடுங்கேணியில் காணாமல் போன 17 வயது மாணவி மீட்பு....
Reviewed by Author
on
June 16, 2016
Rating:

No comments:
Post a Comment