மூன்று வாரங்கள் கடந்தும் இன்னும் 10,674 பேர் அகதி முகாம்களில்...
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் நடந்து மூன்று வாரங்கள் கடந்துவிட்டபோதிலும் பாதிக்கப்பட்டவர்களில் 10,674 பேர் இன்னும் அகதி முகாம்களிலேயே தங்கியுள்ளனர் எனத் தெரியவருகின்றது. 133 அகதி முகாம்களில் 3,100 குடும்பங்களைச் சேர்ந்த 10,674 பேர் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலையில் இன்னும் தங்கியுள்ளனர். சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள 7,587 அகதிகளில் 6,453 பேர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மத்திய மாகாணத்தில் 2,245 பேரும், மேல் மாகாணத்தில் 842 பேரும் இன்னும் அகதி முகாம்களிலேயே தங்கியுள்ளனர். கடந்த மே மாதம் 13ம் திகதி முதல் இவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று வாரங்கள் கடந்தும் இன்னும் 10,674 பேர் அகதி முகாம்களில்...
Reviewed by Author
on
June 04, 2016
Rating:

No comments:
Post a Comment