அண்மைய செய்திகள்

recent
-

வாக்காளர் இடாப்பில் பெயர்களை அவசியம் பதிவு செய்யுங்கள்! கே.கே.மஸ்தான் எம்.பி....


வாக்காளர் இடாப்பு பதிவுகள் தற்போது கிராமசேவகர் பிரிவின் அடிப்படையில் இடம்பெற்று வருவதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாது வாக்காளர் பதிவை மேற்கொள்ளுமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வாக்கு அனைவரதும் உரிமையாகும். எனவே இவ்வாறான வாக்கை ஒவ்வொருவரும் தவறவிடும் சந்தர்ப்பத்தில் பல்வேறான இடர்பாடுகளை சந்திக்கநேருகின்றது. வாக்காளர் பதிவு என்பதும் அதன் இலக்கமும் இன்று எம்முடைய சாதாரண செயற்பாடுகளில் முக்கய தாக்கம் செலுத்தி வருகின்றதனை அனைவரும் உணர்ந்தீருப்பர். குறிப்பாக கிராமசேவகர் நற்சான்றிதழ், முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை சேர்த்தல், சிறந்த மக்கள் பிரதிநிதிகைள தெரிவு செய்தல் என்ற பல்வேறு கோணங்களில் இதன் தேவை அமைந்துள்ளது.

எனவே தற்போது வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதனால் 18 வயதுக்க மேற்பட்ட அனைத்து பிரஜைகளும் தங்களது கிராம சேவகர்களை நாடி அவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கி தங்களது வாக்காளர் பதிவினை மேற்கொள்ளுமாறு கோருகின்றேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் இடாப்பில் பெயர்களை அவசியம் பதிவு செய்யுங்கள்! கே.கே.மஸ்தான் எம்.பி.... Reviewed by Author on June 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.