டெங்குவை கட்டுப்படுத்த 4 வர்ண பைகள்....
டெங்குவை கட்டுப்படுத்த மேல் மாகாண சுகாதார சபையானது நான்கு வர்ண பைகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் நோக்கம் மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமை என மேல்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தீப்தி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 2016ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுகக்குள் கொழும்பு மாவட்டத்தில்7600 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த வர்ண பைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தப் பைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குப்பைகளை வீசும் போது பிளாஸ்டிக் கழிவுகளுக்காக செம்மஞ்சள் நிறமும், கடதாசி பொருட்களுக்காக நீலநிறமும்,பொலித்தீன் கழிவுகளுக்காக மஞ்சள் நிறமும், தேங்காய் சிரட்டைகளுக்காக கபில நிறம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெங்குவை கட்டுப்படுத்த 4 வர்ண பைகள்....
Reviewed by Author
on
June 08, 2016
Rating:
Reviewed by Author
on
June 08, 2016
Rating:


No comments:
Post a Comment