பிரான்ஸில் மீண்டும் பேய் மழையுடன் பலத்த புயல் வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை.....
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பெய்த கனமழையால் ஏற்பட்ட இழப்பில் இருந்து மக்கள் மெதுவாக மீண்டு வரும் நிலையில் வட கிழக்கு பகுதியில் பலத்த புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக பாரீஸில் உள்ள Seine நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.
இதுமட்டுமில்லாமல் Seine, Loing மற்றும் Yonne ஆகிய 3 நதிகளின் கரைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதாரத்தை உண்டாக்கியது.
இந்த பேய் மழைக்கு பலர் காயமடைந்ததுடன் பலரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நேற்று 70 வயது முதியவர் ஒருவர் காருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
இந்த வெள்ள சேதத்தில் இருந்து மக்கள் தற்போது மெதுவாக மீண்டு வருகின்றனர். கனமழையால் ஏற்பட்ட சேதாரங்களை சீராக்க 33,447 கோடி ரூபாய் தேவைப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸின் வடகிழக்கு பகுதியில் பெரிய புயல் மையம் கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், கல் மழையும் பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்த புயல் rand-Est region, Burgundy மற்றும் Franche-Comté பகுதிகளை நண்பகலில் தாக்கலாம் என்றும், இதனால் குறைந்த நேரத்திலே 60 சென்டி மீற்றர் மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் மீண்டும் பேய் மழையுடன் பலத்த புயல் வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை.....
Reviewed by Author
on
June 08, 2016
Rating:

No comments:
Post a Comment