உலகை மாற்றியவர்கள் பட்டியல்: டைம் இதழில் இடம்பிடித்த தமிழர்....
தங்களது புதிய படைப்புகள் மூலம் உலகை மாற்றியவர்கள் என்ற தலைப்பில் டைம் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழர் ஒருவர் இடம் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு டைம் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில், தொலைபேசியில் ஒரு முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும், அதனை மறுமுனையில் கேட்பவரால் புரிந்து கொள்ளும் வகையில் மாற்றும் மென்பொருளை கண்டுபிடித்த சென்னையை சேர்ந்த உமேஷ் சச்தேவ் இடம்பெற்றுள்ளார்.
அவசரகால உதவி மையங்களுக்கு தொடர்பு கொள்ளும் மக்கள், தங்களது உள்ளூர் மொழியில் பேசுவதை, தொலைபேசியின் மறுமுனையில் கேட்பவர் புரிந்து கொள்ளும் வகையில் மாற்றும் மென்பொருளை அறிமுகம் செய்த சாதனைக்காக டைம் இதழ் உமேஷ் சச்தேவை தெரிவு செய்துள்ளது.
இவரது இந்த மென்பொருள் உலக அளவில் 25 மொழிகளையும் 150 பேச்சு வழக்குகளையும் இனம்கண்டு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெருவாரியான இந்தியர்கள் உள்ளிட்ட 50 லட்சம் பேர் சச்தேவ் வடிவமைத்துள்ள இந்த மென்பொருளை பயன்படுத்தி வருகின்றனர்.
30 வயதான உமேஷ் சச்தேவ் அவரது நண்பருடன் இணைந்து சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார், இதே போல, விவசாயிகள், தட்பவெப்ப நிலை குறித்து அறிந்து கொள்ளவும் மென்பொருளை உருவாக்கியுள்ளார் சச்தேவ்.
உலகை மாற்றியவர்கள் பட்டியல்: டைம் இதழில் இடம்பிடித்த தமிழர்....
Reviewed by Author
on
June 10, 2016
Rating:

No comments:
Post a Comment