ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ மொழிகளில் இருந்து ஆங்கிலம் நீக்கம்!
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியுள்ளதால் ஐரோப்பிய ஒன்றிய உத்தியோகபூர்வ மொழிகளில் இருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக, அண்மையில் பிரிட்டனில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 52 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதனால், ஒன்றியத்திலிருந்து விலக பிரிட்டன் தீர்மானித்தது.
இந்நிலையில், பிரிட்டன் பாராளுமன்றம் நேற்று கூடி ஆலோசித்ததுள்ளதுடன் பிரிட்டன் விரைவாக வெளியேற வேண்டும் எனவும் இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விரைவாக பிரிட்டன் விலகவேண்டும் என சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால் சர்வதேச நாடுகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இதன்போது விளக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் பதவி விலகிய பின்புதான் பிரிட்டன் விலகல் நடைமுறைக்கு சாத்தியமாகும் என்று தெரிகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால், ஆங்கில மொழிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் இருந்தது.
இதுதான் தொடர்பு மொழியாக, இந்த ஒன்றியத்திலுள்ள நாடுகளிடையே பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது பிரிட்டன் விலகியுள்ளதைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ மொழியில் இருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளது.
இந்த ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழி வழக்கத்தில் உள்ளது. அவற்றையே பயன்படுத்த அந்நாடுகள் முடிவு செய்துள்ளன.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு ஒன்று விலகுவது இதுவே முதல்முறையாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ மொழிகளில் இருந்து ஆங்கிலம் நீக்கம்!
Reviewed by Author
on
June 29, 2016
Rating:

No comments:
Post a Comment