பாகிஸ்தானில் 2 கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை....
பாகிஸ்தானில் மதநம்பிக்கையை குறித்து அவதூறாகப் பேசிய குற்றத்திற்காக இரண்டு கிறிஸ்தவர்கள் உட்பட மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலா பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சம் நாஸ். இவர் கடந்த மே மாதம் உள்ளூர் பொலிசில் அளித்த புகாரில் ஜாவத் நாஸ், ஜாபர் அலி ஆகியோர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து பொலிஸ் நடத்திய விசாரணையில், அஞ்சம் நாஸ் முஸ்லிம் மதம் குறித்து அவதூறாக பேசிய ஓடியோ ஜாவத் நாஸ், ஜாபர் அலியிடம் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் ஓடியோவை காட்டி மிரட்டி அஞ்சம் நாஸிடம் இருவரும் பணம் பறித்தது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து மூன்று பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டுகளாக குறித்த வழக்கை விசாரித்த குஜ்ரன் வாலா பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், கடந்த ஜூன் 28ம் திகதி மூன்று பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், அஞ்சம் நாஸிற்கு 50 லட்சமும், ஜாவத் நாஸ், ஜாபர் அலிக்கு தலா 80 லட்சமும் அபராதம் விதித்துள்ளது.
இதில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அஞ்சம் நாஸ், ஜாவத் நாஸ் ஆகியோர் கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அஞ்சம் நாஸின் சகோதரர் ஆசிப் கூறியதாவது, என் அண்ணன் குற்றமற்றவர், அதை நிரூபிக்க குறித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் 2 கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை....
Reviewed by Author
on
June 29, 2016
Rating:

No comments:
Post a Comment