யாழ்.இந்துக்கல்லூரி பழைய மாணவர்களினால் உருவாக்கப்பட்ட கணித நூல் அறிமுகம்....
யாழ்.இந்துக்கல்லூரி பழைய மாணவர்களினால் உருவாக்கப்பட்டுள்ள இந்துஒளி கணித பாட இலகு கையேட்டின் அறிமுக நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
எமது எதிர்கால சந்ததியின் கல்விக்கு கைகொடுப்போம் என்னும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ஆசிய மன்றத்தின் சிரேஸ்ட ஆலோசகர் ஏ.சுபாகரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கணித பாடத்தின் சித்தி வீதத்தினை அதிகரிக்கும் விசேட செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக இந்த கையேடு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களில் இருந்து கல்வி திணைக்கள அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
யாழ்.இந்துக்கல்லூரி பழைய மாணவர்களினால் உருவாக்கப்பட்ட கணித நூல் அறிமுகம்....
Reviewed by Author
on
June 29, 2016
Rating:

No comments:
Post a Comment