மீண்டும் வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்: குஷியில் ரசிகர்கள்....
சூதாட்ட வழக்கில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதித்ததால் சென்னை ரசிகர்கள் மிகவும் தவிப்புக்கு ஆளாகினர்.
மேலும், இந்த அணிக்கு தல டோனி அணித்தலைவராக இருந்ததால், டோனியையும் இழந்துவிட்டோமே என சோகத்தில் இருந்த அவர்களை குஷிப்படுத்தும் விதமாக, மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் வரவிருக்கிறது.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயரில் அல்ல, Junior Super Kings என்ற பெயரில் அணி உருவாக்கப்பட்டுள்ளது.
Junior Super Kings inter-school T20 tournament இன்று ஆரம்பித்துள்ளது, தமிழகத்தில் உள்ள பள்ளிக்குந்தைகளை வைத்து இந்த போட்டி நடத்தப்படவிருக்கிறது.
இந்த போட்டி 4 கட்டங்களாக நடத்தப்படவிருக்கிற, இதில் அறிமுக கட்டத்தில் தமிழகத்தில் உள்ள 32 பள்ளிகள் கலந்துகொள்ளவிருக்கின்றன.
இரண்டாவதாக, ஆகஸ்ட் 2 ஆம் திகதி வேலூர், ஈரோடு, விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நடைபெறவிருக்கிறது, இந்த மாவட்டங்களில் 7 போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன.
மூன்றாவது கட்ட போட்டி, 15 போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன, ஆகஸ்ட் 8 ஆம் திகதி தொடங்கும் இந்த போட்டிகள், மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவிருக்கிறது.
தற்போது நடைபெறவிருக்கும் இந்த போட்டியால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களத்திற்கு வந்துவிட்டது போல் உள்ளது என தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
மீண்டும் வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்: குஷியில் ரசிகர்கள்....
Reviewed by Author
on
June 29, 2016
Rating:

No comments:
Post a Comment