மன்னார் முருங்கனில் சிறப்பாக இடம்பெற்ற கலைவிழா-Photos
மன்னார் முருங்கனில் I.M.S.E.S.O நிறுவனத்தின் ஏற்பாட்டில் கலை விழா நேற்று (17) இரவு முருங்கன் பிட்டி கிறிஸ்து அரசர் ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது.
குறித்த விழாவில் பிரதம விருந்தினராக மன்னார் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதிமேதகு ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை கலந்து கொண்டுள்ளார்.
சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண அமைச்சர்களான பா. டெனிஸ்வரன், ரீ.குருகுலராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிகழ்வில் நானாட்டான் பிரதேச செயலாளர், முருங்கன் விகராதிபதி, பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த நிகழ்வுகள் கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் முருங்கனில் சிறப்பாக இடம்பெற்ற கலைவிழா-Photos
Reviewed by Author
on
June 18, 2016
Rating:

No comments:
Post a Comment