ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் க.பத்மநாபா மற்றும் போராளிகளின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் மன்னாரில் அனுஸ்ரிப்பு-Photos
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்(ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் தோழர் க.பத்மநாபா மற்றும் போராளிகளின்; 26 ஆவது நினைவு தினம் இன்று(19) ஞாயிற்றுக்கிழமை காலை மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது.
-மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்(ஈ.பி.ஆர்.எல்.எப்) அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம் பெற்றது.

-இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசிலன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர்களான யூட் குரூஸ்,பீற்றர் மடுத்தின்,ஜேம்ஸ் ஜேசுதாஸ்,உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்(ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் தோழர் க.பத்மநாபா அவர்களின் உறுவப்படத்திற்கு மாலை அனுவித்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதன் போது உயிர் நீத்த ஏனைய போராளிகள்,பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் க.பத்மநாபா மற்றும் போராளிகளின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் மன்னாரில் அனுஸ்ரிப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
June 19, 2016
Rating:

No comments:
Post a Comment