விடுதலைப் புலிகளின் கொய்யாத்தோட்டம்!
மட்டக்களப்பு - பதுளை வீதியில் உள்ள புத்தம்புரி பகுதியில் விடுதலைப்புலிகளினால் பராமரிக்கப்பட்ட கொய்யாத்தோட்டம் இன்றும் காய்த்து கொண்டுதான் இருக்கின்றது.
கொய்யாத்தோட்டம் என்று அழைக்கப்படும் மேற்படி இடமானது விடுதலைப்புலிகளின் காலத்தில் மிகப்பெரிய தோட்டமாக இருந்துள்ளது.
விடுதலைப்புலிகளின் காலத்திற்குப் பின்னர் குறித்த தோட்டத்தை அரசாங்கமோ அல்லது நிறுவனங்களோ பொறுப்பேற்று நடத்த தவறியதால் குறித்த பிரதேசத்தில் காடுகள் நிறைந்து காணப்படுகின்றது.
தற்போது கச்சான் செய்கை இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், அங்கு காணப்படுகின்ற கொய்யாத்தோட்டம் மட்டும் காடுகள் நிறைந்த பிரதேசமாக காணப்படுகின்றது.
இருந்தும் புலிகளினால் பராமரிக்கப்பட்ட கொய்யாத்தோட்டம் இன்றும் காய்த்து குலுங்குவதுடன் குறித்த பகுதிகளுக்குச் செல்லும் பலர் கொய்யாப் பழங்களை பறித்து உண்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
விடுதலைப் புலிகளின் கொய்யாத்தோட்டம்!
Reviewed by NEWMANNAR
on
June 21, 2016
Rating:

No comments:
Post a Comment