செருப்பில் இந்துக்களின் "ஓம்" சின்னம்: ரம்ஜான் காலத்தில் பாகிஸ்தானில் விற்பனை
பாகிஸ்தானில் இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக ‛ஓம்\' சின்னம் பொறித்த செருப்பினை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் இந்து கவுன்சில் தலைவர் ரமேஷ் குமார் வாங்குவானி கூறியதாவது, பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் தண்டோ ஆடம் பகுதியில் இந்துக்கள் புனிதமாக கருதும் ‛ஓம்\' சின்னம் பொறித்த செருப்பு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மூன்று வருடங்களாக ரம்ஜான் பண்டிகை காலத்தில் இந்த விற்பனை நடக்கிறது.
இது இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது. மேலும் இது இந்துக்களின் பாதுகாப்பின்மையை அதிகரிக்கும்.
இந்த விற்பனையில் ஈடுப்பட்டுள்ள நபர்கள் மீது பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
செருப்பில் இந்துக்களின் "ஓம்" சின்னம்: ரம்ஜான் காலத்தில் பாகிஸ்தானில் விற்பனை
Reviewed by NEWMANNAR
on
June 21, 2016
Rating:

No comments:
Post a Comment