அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய (06-07-2016) கேள்வி பதில்

கேள்வி:−
      பெரு மதிப்பிற்குரிய சட்டத்தரணி SuthanLaw ஐயா!நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுப்பிரமணியம்.ஐயா என் மாமனார் பெயரில் அவருடைய அப்பா எழுதி வைத்த வீடு(×−×−)இல் உள்ளது. தற்போது அவருடைய தம்பி அந்த வீட்டில் குடி இருந்து கொண்டு வீடு எனக்கு வேண்டும் என்று சண்டை இடுகிறான்."அந்த சொத்தை தன் அப்பா பெயரில் எழுதி வைத்து விற்றுக் கொடுக்குமாறு"கூறுகிறார்.தற்போது எல்லா ஆவணங்களும் என் அப்பா பெயரில் உள்ளது. இருப்பினும் என் மாமனாரின் தம்பி அந்த வீட்டை விட்டு போக மறுக்கிறான்.எனவே நான் அந்த சொத்தை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்.தயவு செய்து உரிய ஆலோசனை கூறுங்கள் ஐயா!

பதில்:−
      அன்பான சகோதரரே! ஒரு தந்தை சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த சொத்தை ஒரு மகனுக்கு மட்டும் எழுதி வைத்துள்ளார்.இன்னொரு மகன் அங்கு இருந்து கொண்டு காலி செய்ய மாட்டேன் என்று சொத்தில் உரிமை கோருகிறார்.
தற்போது சொத்து உங்கள் தந்தை பெயரில் உள்ளது என்கிறீர்கள்.இதற்கு தாங்கள் ஒரு சட்டத்தரணியின் ஊடாக உங்கள் தந்தை குறிப்பிட்ட நபரை காலி செய்ய சொல்லி நோட்டிஸ் அனுப்ப வேண்டும்.அவர் ஒரு அனுமதிக்கப்பட்ட ஆக்கிரமிப்பாளர் ( Permissive occupier) தான்.அவரை தற்காலிகமாக தான் அங்கு தங்க அனுமதி தரப்பட்டது என்றும்,அது உடனடியாக தங்கள் உபயோகத்துக்கு தேவை என்பதால் காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டிஸ் அனுப்புதல் வேண்டும்.

அவர் காலி செய்யாத பட்சத்தில் அவரை வெளியேற்றுவதற்கு (Ejection) வழக்கு தொடுக்க வேண்டியிருக்கும்.முதலில் செய்ய வேண்டியது அவருக்கு நோட்டிஸ் அனுப்பவது தான்.
நீங்கள் உடனடியாக ஒரு வழக்கறிஞரை அணுகி இது சம்பந்தமாக பேசி நடவடிக்கை எடுக்கவும்.

குறிப்பு 

 உங்கள் சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.
அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி
newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் .
இன்றைய (06-07-2016) கேள்வி பதில் Reviewed by NEWMANNAR on July 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.