அண்மைய செய்திகள்

recent
-

முட்டை வடிவ குண்டுடன் உயிரிழக்க தயாராகிவரும் பெண்!


அமெரிக்காவின் டஸ்கான் பகுதியில் உள்ள லோரா பீவர் என்ற (Laura Bever) பெண் பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த பெண்ணின் முகத்தில் முட்டை வடிவிலான சிறிய குண்டு ஒன்று இருப்பதாவும்,இதனால் குறித்த பெண் எந்த நேரத்திலும் உயரிழக்க நேரிடும் என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளனர்.

லோரா பீவர் என்ற 27 வயதுடைய குறி்த்த பெண்ணிற்கு உதட்டின் மேல் பகுதியில் 3 வருடங்களுக்கு முன்பில் இருந்தே வலி ஒன்று இருந்து வந்துள்ளது.

ஆனால் இந்த கட்டியானது இவரது காது பகுதி,மூக்கு,தொண்டை போன்ற பகுதிகளில் அசைந்துச் செல்கின்றது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இரத்த ஓட்டம் மற்றும் நாடி,நாளங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்தி விடும் என வைத்தியர்கள் மேலும் கூறியுள்ளனர்.

இந்த கட்டியை கரைப்பதற்காக கடந்த ஆண்டு லோரா சிகிச்சை ஒன்றை மேற்கொண்டுள்ளார், இருப்பினும் அந்த சிகிச்சை அவருக்கு பலனளிக்கவில்லை என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

துரதிஸ்டவசமாக கட்டியானது இவரின் மூக்கு மற்றும் உதடு பகுதிகளில் பெருகிக் கொண்டே போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட வைத்தியர் ஒருவர் இருந்த போதிலும் பணப் பிரச்சினை காரணமாக சிகிச்சையை அடுத்த வருடம் மேற்கொள்ளப் போவதாக லோரா பீவர் கூறியுள்ளார்.

அதுவரையில் மன அழுத்தங்கள் இன்றி,சமநிலையில் உடலை பேணிக்கொள்ளுமாறு லோரா பீவரிற்கு வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

சில சமயங்களில் முகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து இரத்தங்கள் வருவதாகவும் லோரா பீவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, லோரா பீவர் இரண்டு பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

முட்டை வடிவ குண்டுடன் உயிரிழக்க தயாராகிவரும் பெண்! Reviewed by Author on July 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.