அண்மைய செய்திகள்

recent
-

பாம்புக் கடியிலிருந்து நாய்களை பாதுகாக்க ஒர் புதிய கண்டு பிடிப்பு!


ஆஸியில் விசப்பாம்புக் கடிக்கு உள்ளாகும் ஆயிரக் கணக்கான நாய்களை சிசிச்சையளிப்பதற்கென Anti-Venom கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

CSIRO scientists, சிறிய பயோடெக் நிறுவனமான Padula Serums உடன் இணைந்து Eastern Brown மற்றும் Tiger பாம்புக்கடிக்கெதிராக சிகிச்சையளிப்பதற்கென Anti-Venom தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஆஸியானது உலகத்திலேயே மிகக் கொடிய 10 பாம்புகள் வசிக்கும் இடமாக உள்ளது.

இது வரையிலும் Anti-Venom ஆனது மனிதர்களுக்கு சிகிச்சையளிக்கவே பயன்படுத்தப்பட்டு வந்தது, வளர்ப்புப் பிராணிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

ஆனாலும் தற்போது இது நாய்கள் மற்றும் பூனைகளுக்கென பரிசீலிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பில் மேற்படி உற்பத்தி நிறுவனத்தின் பணியாளர் George Lovrecz கூறுகையில், தற்போது தயாரிக்கப்பட்டுள் Anti-Venom ஆனது முற்றாக பரிசோதிக்கப்பட்ட, தூய பதார்த்தம், இது பாம்புக்கடிக்குள்ளான நாய்களுக்கு நேரடியாக உட்செலுத்த முடியும் என்கிறார்.

இது திறனுள்ளதும், பாதுகாப்பானதும் என்பதுடன் மிக குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சொல்லப்படுகிறது.

பாம்புக் கடியிலிருந்து நாய்களை பாதுகாக்க ஒர் புதிய கண்டு பிடிப்பு! Reviewed by Author on July 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.